உலகம் பிறந்தது எனக்காக-ulagam pirandhadhu enakaaga (பாசம் 1962)
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக.....
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக.....
தவழும் நிலவாம் தங்க ரதம்
தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கலைகூடம்
கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கலைகூடம்
கொண்டது எனது அரசாங்கம்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக.....
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
பாடகர் டி.எம். சௌந்தரராஜன்
இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
படம்: பாசம் 1962
https://www.youtube.com/watch?v=IU4FrIZT5QE