மலர்ந்தும் மலராத-Malarndhum Malaradha (பாசமலர் (1961))

பெண்: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே ( இசை ) ஆண்: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே ஆண்: யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு... அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... வாழப் பிறந்தாயடா... பெண்: தங்க கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்.... உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக... மாமன் தங்கை மகளான ... மங்கை உனக்காக ... உலகை விலை பேசுவார் ( இசை ) ஆண்: நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே பெண்: சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா... பிரித்த கதை சொல்லவா ஆண்: கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா ம்... ம்... ம்... ம்... பெண்: அன்பே ஆரி ராராரோ ஆரி ராராரோ ஆரி ராராரிரோ அன்பே ஆரி ராராரிரோ ஆரி ராராரிரோ... பாசமலர் (1961) திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன் / பி. சுசீலா பாடி விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், கவிஞர் கண்ணதாசன் https://youtu.be/nzVUwY2e3W0?si=meMeoi70BcJnvc_o
00:00 00:00
🔊
+
Clear Filters ↑ Back to Player Deck
Play Wish Share Video
▶ 🤍 ஒரு நாள் போதுமா-Oru naal podhuma திருவிளையாடல் (1965) எம். பாலமுரளிகிருஷ்ணா கவிஞர் கண்ணதாசன் கே. வி. மகாதேவன் None
▶ 🤍 மலர்ந்தும் மலராத-Malarndhum Malaradha பாசமலர் (1961) டி. எம். சௌந்தரராஜன் / பி. சுசீலா பாடி கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ 🤍 இறைவனிடம் கையேந்துங்கள்-Iraivinidam Kaiyendhungal பக்திப் பாடல் 1963-1964 இசைமுரசு நாகூர் E.M. ஹனிபா கிளியனூர் R.அப்துல் ஸலாம் M.முத்து/S.V.வெங்கட்ராமன் None
▶ 🤍 நான் ஆணையிட்டால் -Naan aanaiyittal எங்க வீட்டுப் பிள்ளை (1965) டி.எம். சௌந்தரராஜன் வாலி விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ ❤️ உலகம் பிறந்தது எனக்காக-ulagam pirandhadhu enakaaga பாசம் 1962 டி.எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி None
▶ ❤️ தரை மேல் பிறக்க வைத்தான்-tharimel perakka vaithaan படகோட்டி (1964) டி.எம். சௌந்தரராஜன் வாலி விஸ்வநாதன் ராமமூர்த்தி None